Wednesday, March 4, 2026
HomeUncategorizedபோலீசார் படுகொலை - கொலையாளிகள் பிடிபட்டனர்

போலீசார் படுகொலை – கொலையாளிகள் பிடிபட்டனர்

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ பூமிநாதன் நேற்று அதிகாலை ஆடு திருடிச்சென்ற நபர்களை மடக்கி பிடித்தார்.

அப்போது திரும்பி செல்போனில் பேசிக்கொண்டிருந்த எஸ்ஐ பூமிநாதனை திருட்டுக்கும்பல் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியது.

இந்த சம்பவத்திலேயே எஸ்ஐ பரிதாபமாக இறந்தார். தமிழக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2.40 மணீக்கு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நவல்பட்டு ஏட்டு சித்ரவேல் மற்றும் கீரனூர் ஏட்டு சேகர் ஆகியோர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் 4 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை ஆரம்பித்தது. கொலை செய்யப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் ஏட்டு சேகரிடம் செல்போனில் பேசிய எஸ்ஐ பூமிநாதன் பிடிபட்ட நபர்கள் தேனீர்பட்டி என கூறுவதாக தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் தனிப்படையினர் தேனீர்பட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டன். மேலும் எஸ்ஐ பூமிநாதனின் பின்தலையில் கறி வெட்டும் அரிவாள் போன்ற பலமான ஆயுதத்ததால் வெட்டப்பட்டிருந்தால் கறிக்கடை தொடர்புடைய ஆட்கள் கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர்.

இந்த நிலையில் அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை கொலை நடந்த இடத்தில் செயல்பட்ட செல்போன்களின் மூலம்போலீசார் விசாரணையை துவக்கினர். அப்போது 2 செல்போன்கள் சம்பவ இடத்தில் இருந்து புதுக்கோட்டை- பொன்னமராவதி இடையில் இருப்பது கண்டுபிடித்த தனிப்படை போலீசார் நேற்று மதியம் அப்பகுதிக்கு சென்றனர்.

ஆனால் கொலையாளிகள் மதியத்திற்கு மேல் செல்போன்களை சுவிட்ச் செய்து விட்டனர். தொடர்ந்து விசாரணையின் இன்று அதிகாலை 3 மணியளவில் கொலையாளிகள் 4 பேரையும் பிடித்தனர். இவர்களில் 2 பேர் சிறுவர்கள்.. கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர்கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆடுகளை திருடும் தொழிலை பல வருடகாலமாக செய்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்ததுள்ளது..

கொலையாளிகள் தற்போது திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.. 24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த திருச்சி தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments