சென்னை மாங்காடு பகுதியில் கழக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கிய பிறகு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
தமிழ்நாட்டில் குறிப்பாகப் பொதுமக்களும் அதுபோல கழக தொண்டர்களும்,அவர்களுடைய வேண்டுகோள் எண்ணம் என்பது, அம்மா வாழ்ந்து மறைந்த இல்லம் என்பது எங்களை போன்ற தொண்டர்களுக்குத் திருக்கோயிலாகவும், அம்மா வாழ்ந்த இல்லம் என்பது வருங்கால சந்ததினருக்கு வெற்றி வீராங்கனையாக,சமூக நீதி காத்த வீராங்கனையாகப் பன்மொழி தன்மையாக என்கின்ற அவருடைய அறிவு,ஆற்றல்,திறமை ஆகியவை அவர்களுக்கு தெரியவேண்டும்.
எனவே அவர்களைப் பற்றிய முழுமையான வரலாற்றை எடுத்து அளிக்கின்ற இல்லம் என்கிற வகையில் பொதுமக்கள் மற்றும் கழகத்தினர் எண்ணத்திற்கு செயல்வடிவம் தரும்வகையில் அதனை நினைவில்லமாக்க சட்டமாக்கி திறக்கப்பட்டது.ஆனால் அதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தற்போது ஒப்படைத்துள்ளார்கள்.
இணை ஒருங்கிணைப்பாளர் தன்னுடைய பேட்டியில் குறிபிட்டதுபோல கழகத்தின் நிலை என்பது அம்மா வாழ்ந்த மறைந்த இல்லத்தை நினைவு இல்லமாக இருக்கவேண்டும்.இதற்கு மேல்முறையீடு செய்ய சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தை தெரிவித்தார்.
இதுதான் கழகத்தின் நிலை. அம்மா அவர்கள் சரித்திர சகாப்தம்.அந்த சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைவேண்டும் என்றால் அந்த வகையில்தான் அதனை நினைவு இல்லமாக அம்மாவின் அரசு சட்டமாக்கியது.
அதற்கு தீபா,தீபக் முழு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம்தான் அம்மாவிற்கு செய்கின்ற சிறப்பாக அது அமையும்.இதில் அவர்களை பொருத்தவரை பெருந்தன்மையோடு,முழுமையாக அம்மாவின் வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறியும் வகையிலே இதற்கு கழகத்திற்கு சரித்திரம் பேச படவேண்டும் என்ற அளவிற்கு அவர்கள் முழுமையான ஒத்துழைப்பு தருவதுதான் சிறந்த தீர்வாக இருக்க முடியும்.
இவ்வாறு பேட்டி அளித்தார்.தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
கேள்வி…பொய்வழக்கு போடுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாரே
பதில்………எதிர்க்கட்சியாக திமுக இருக்கும்போது அப்போது வாய்கிழியப் பேசினார்கள்.இந்த ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை,இல்லை என்று பேசினார்கள்.ஆனால் இப்போது என்ன நடக்கிறது.
இப்போது முதலமைச்சருக்கு ஒத்தூதினால் அது கருத்து சுதந்திரம்.ஆட்சிக்கு எதிராகவும்,திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் ஆரோக்கியமான விமர்ச்சனங்களை வைத்தால் அது கருத்துச் சுதந்திரம் கிடையாது.தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சிதான் நடந்துவருகிறது.யாரும் பேசக்கூடாது.சபரீசனைப்பற்றி பேசக்கூடாது.உதயநிதியைப் பற்றி பேசக்கூடாது.யார் இன்றைக்கு ஆட்சி செய்கிறார்கள்.திமுக தலைவர் ஸ்டாலினா ஆட்சி செய்கிறார்.
சபரீசன்தான் இன்றைக்கு ஆட்சி செய்கிறார்.அதிகாரிகள் மாற்றத்திலிருந்து பல்வேறு மாற்றங்கள் எல்லாம் சபரீசனின் தலையீடு இருப்பதாக பல பத்திரிக்கைகளில் பலரும் இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயகத்தின் விமர்ச்சனம் செய்தால் எதிர் விமர்சனம் செய்யுங்கள்.இப்போது நான் ஒரு பேட்டி அளித்தால் நீங்களும் ஒரு பேட்டி அளித்து அது தவறு என்று சொல்லுங்கள்.இதை விட்டுவிட்டு உடனடியாக ஒரு புகாரைப் பெற்று நடவடிக்கை எடுத்து ஜெயிலில் போடுவது. மாரிதாஸ் கருத்துக்குள் நான் போகவிரும்பவில்லை.
தேச நலன்,தேச பாதுகாப்பு என்பதுதான் கழகத்தின் கொள்கை.ஆனால் இந்த ஆட்சிக்கு எதிராக யார் வாயைத் திறந்தாலும் உடனடியாக குண்டர் சட்டத்தில் போடுவது,பொய் வழக்குத் தொடுப்பது எப்படிச் சரியாக இருக்கும்.இப்படிப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசு,மினி எமர்ஜென்சிபோன்றுதான் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது.
ஒரு அதிகாரி குறித்து ஒரு கட்சி விமர்சனம் செய்கிறது என்றால் அதனை ஆரோக்கியமான முறையில் செய்யவேண்டும். அவர் சில குற்றச்சாட்டுகளை காவல்துறைத் தலைவர் மீது சொல்கிறார்.அதற்காக ஒரு அமைச்சர் வெந்ததை தின்றுவிட்டுவந்து வாய்க்கு வந்தபடி பேசினால் எப்படி.
இது மேசமான விமர்சனம் இல்லையா.யாரை பற்றியும் யாரும் விமர்சனம் செய்யக்கூடாதா.அமைச்சர்களுக்கு வாய்தான் காதுவரை உள்ளது.வேறு ஒன்றும் கிடையாது.
திமுக ஆட்சியில் ஒரு புதிய திட்டமும் கிடையாது.அம்மாவின் அரசில் என்ன என்ன திட்டங்களை கொண்டுவந்தார்களே அதைதான் இன்றைக்குச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு அரசு அலுவலங்களில் குறிப்பாக டிஎன்பிசியில் 20 சதவீதம் தமிழில் படித்தால்தான் வேலை.இந்த ஆணையைப் போட்டது நாங்கள்.இவர்கள் இந்த ஆணையைப் போட்டதுபோல பெரியதாக மீடியாவில் பில்டப் செய்துவருகிறார்கள்.இதுபோன்று ஏமாற்றுவேலை,
மோசடியான வேலையை திமுக அரசு செய்துவருகிறது.அன்றைக்கு அம்மாவின் அரசில் மத்திய அரசோடு வாதாடி,போராடி 11 மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றோம்.பல மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் நடந்தது அம்மாவின் ஆட்சியில். நாங்கள் கட்டிய கட்டிடத்தை இன்றைக்கு கத்திரிக்கோல்வைத்து ஜோராகச் சென்று திறக்கிறார்கள்.ஏதே இவர்கள் ஆட்சியில் கட்டியதுபோன்று இதற்கு ஒரு பில்டப் தருகிறார்கள்.கட்டப்பட்ட கட்டிடங்கள்,பாலங்கள், எல்லா திட்டங்களும் அம்மாவின் அரசிலே கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் ஏதோ இவர்கள் கொண்டுவந்ததுபோல ஒரு செயற்கையான தோற்றத்தைக் கொடுக்கிறார்கள்.ஆனால் அது உண்மையல்ல.
கேள்வி..வேளாண் சட்டம் வாபஸ் பெற்றது பாஜகாவின் தோல்வி என்று சமூக வலைதலங்களில் குறிப்பிட்டுவருகிறார்களே…
பதில்….இன்றைக்குத் தமிழகத்தின் விவசாயிகளின் நிலை என்ன.வேளாண் சட்டத்தைப் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்களே.பொட்டாஷ் உரம் 1200 விற்பனை ஆகிறது.இன்றைக்குக் கட்டுமான பொருட்களின் விலை என்ன.அத்தியாவசிய பொருட்களின் விலை என்ன.மளிகை சாமான்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
சந்தி சிரிக்கும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு உள்ளது.யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இன்றைக்குத் தமிழகத்தில் உள்ளது.விசாரணைக்கு அழைத்து சென்ற மணிகண்டன் என்ற மாணவர் இறக்கிறார்.அந்த அளவுக்குத் தமிழகத்தில் அராஜகத்தின் உச்சகட்ட ஆட்சி நடைபெற்றுவருகிறது.வெட்டு,குத்து,கொலை,கற்பழிப்பு,இதுதான் தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவருகிறது.
கேள்வி…அண்ணா பிறந்தநாளில் பல கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கை உள்ளதே..
பதில் …எங்களைப் பொறுத்தவரையில் குற்றங்களின் தன்மையை ஆராய்ந்து அந்த வகையில்தான் விடுதலை செய்யவேண்டும்.நாங்கள் கடந்தகாலங்களில் அதுபோன்றுதான் ஒரு அளவுகோலை வைத்து செய்தோம்.
சமூக நலன்,மாநிலத்தின் நலன்,பொதுமக்களின் நலன் என்ற அடிப்படையில் கண்ணும் கருத்துமாக இருந்து அரசு செயல்படவேண்டும்.இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
அரசியல் அமைப்பு அடிப்படையில் ஆளுநர் செயல்படுகிறார்.இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.ஆனால் அதே நேரத்தில் ஆளுநரை சந்தித்துவிட்டு நீட்டுக்கு விதிவிலக்கு கேட்டோம் என்று தமிழக அரசு தெரிவித்தது.ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து கொரோனவை கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாகச் சந்தித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் எவ்வளவு முரண்பாடு உள்ளது.இது எவ்வளவு மக்களை ஏமாற்றும் செயல்.இன்றைக்கு நீட் குறித்து யாராவது பேசுகிறார்களா.இந்த கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் நீட் தொடர்பாக ஏதாவது குரல் எழுப்பினார்களா.நீட் வேண்டாம் என்று யாராவது குரல் கொடுத்தார்களா.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான உரிமைக்கு குரல் கொடுத்தார்களா.மேகதாது குறித்து குரல் கொடுத்தார்களா.எந்த விஷயத்திற்கு குரல் கொடுத்தார்கள்.இவர்களுக்கு தமிழக நலன் குறித்து கவலையில்லை.இதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது.37 எம்பிக்கள் இருந்தும் தமிழகத்தின் உரிமை குறித்து ஒரு வார்த்தை பேசினார்களா.
எதிர்க்கட்சியாக்க இருக்கும்போது 7 பேர் விடுதலை குறித்து வாய்கிழிய விடுதலை செய்யவேண்டும் என்று பேசினார்கள்.இப்போது விடுதலை செய்யவேண்டியதுதானே.திமுக 2006 ல் ஆட்சியில் இருக்கும்போது நளினிக்கு குழந்தை இருப்பதால் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முடிவு செய்தார்.மற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று சொன்னார்கள்.
நாங்கள் ஆளும்கட்சியாக இருக்கும்போது 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.இப்போது ஏன் 7 பேர் விடுதலை ஏன் பேசவில்லை.நாங்கள் எடுத்த முடிவிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை.பேக் அடிக்கும் பழக்கம் எங்களுக்கு கிடையாது.யூ டன் அடிக்கும் பழக்கம் எங்களுக்கு கிடையாது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

