Wednesday, March 4, 2026
HomeUncategorizedதமிழக முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய நயன்தாரா

தமிழக முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கிய நயன்தாரா

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நானும் ரவுடிதான் என்ற படத்தில் இணைந்து பணியாற்றியபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில், இவர்கள் திருமணம் செய்யமுடிவு செய்தனர். 

இதற்கான விழா சென்னை ஈ.சி.ஆரில் உள்ள தனியார் இடத்தில் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவரிடம் திருமணத்திற்கான அழைப்பிதழை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வழங்கினர்.

முதல்வரை தொடர்ந்து மேலும் பல திரைப்  பிரபலங்களுக்கும்,  அரசியல் பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்க இருவரும் திட்டமிட்டிருக்கின்றனர்.

ஜூன் 8ஆம் தேதி நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 30 பிரபலங்கள் உட்பட கிட்டத்தட்ட 200 பேரை அழைக்க திட்டமிட்டுள்ளார்களாம். ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments