Friday, February 6, 2026
HomeUncategorizedஇயக்குனர் சிகரம் கே.பி. பிறந்த நாள் இன்று

இயக்குனர் சிகரம் கே.பி. பிறந்த நாள் இன்று

நடிகர்களின் பக்கம் இருந்த ரசிகர்களின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்தவர்களும் பிரமிக்க வைத்தவர்களும் நிறையபேர் உண்டு. முதன்முதலாக நடிகர்களைச் சொல்லி படத்தின் பெயரைச் சொன்னதை மாற்றியவர் புதுமை இயக்குநர் ஸ்ரீதர். ‘இது ஸ்ரீதர் படம்’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

அதேபோல், அந்தப் பாதையில் தனித்துவத்துடன் இன்னும் கூடுதல் அழகையும் கூர்மையான புத்திசாலித்தனத்தையும் வசனங்களிலும் காட்சிகளிலும் வைத்து சிகரமாக்கியவர்… இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். அவர் இயக்கத்தில், ஓடிய படங்கள் ஓடாத படங்கள் என்றிருக்கலாம். நல்லபடம், சரியில்லாத படம் என்றிருக்காது. எந்தப் படமாக இருந்தாலும், அதில் ‘பாலசந்தர் படம்’ என்று சொல்லுவதற்கான விஷயங்களை ஆங்காங்கே தூவியிருப்பார். அதை இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

 ரசிகர்கள். தமிழ் சினிமாவில் அதிக அளவில் நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்தது பாலசந்தராகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட 65க்கும் மேற்பட்டவர்களை அறிமுகப்படுத்தி, இதில் முக்கால்வாசிபேரை நம் மனதில் நிற்கவைத்தும் சாதித்தவர் பாலசந்தர். எம்ஜிஆர் – சிவாஜிக்குப் பிறகான அந்த இடத்தை, கமல் – ரஜினியை உருவாக்கி நிரப்பியரிவர். முதல் வசனம் நல்ல வார்த்தைகளில் வரவேண்டும். படத்தின் பெயர் 8 எழுத்துகளில் வந்துவிடக்‍கூடாது என சகுனங்களுக்‍கு சல்யூட் அடிக்‍கிற சினிமா உலகில், தான் முதன்முதலாக இயக்‍கிய படத்திற்கு கே.பி. வைத்த பெயர் ‘நீர்க்குமிழி’.

அதில் தொடங்கிய அவரது திரையுலக வாழ்வு, நாளடைவில் நயாகரா நீர்வீழ்ச்சியாய் பலரையும் பரபரப்பாக பார்க்‍க வைத்தது. கலையுலகில் கற்பனை வறட்சியாளர்கள் ஒருசிலர் வலம் வந்த காலத்தில், கம்பீரப் புரட்சியாளராகத் திகழ்ந்தார் பாலசந்தர். இயக்குனர் சிகரம் இன்று நம்மோடு இருந்திருந்திருந்தால் அவரது 92வது பிறந்த நாளான இன்று அவர் வீட்டு வாசலில் ரஜியும், கமலும் நின்றிருப்பார்கள்.

அவர் பெயரில் பிரகாஷ்ராஜ் தானதர்மம் பண்ணியிருப்பார், வசந்த் அவரைப் பற்றிய குறும்படம் ஒன்று உருவாக்கி வெளியிட்டிருப்பார், விவேக் கவிதை பாடியிருப்பார். சமுத்திரகனி உருகி இருப்பார். கே.பி-க்கு ஹேப்பி பர்த் டே சொல்வோமே!!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments