நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் மத நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

