Friday, March 13, 2026
HomeUncategorizedநாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் - 2023-ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு தொடங்கியது

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் – 2023-ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு தொடங்கியது

நாமக்கல் ஆஞ்சநேயர் உலக பிரசித்திப்பெற்றது. இந்த ஆஞ்சநேயர் கோயில் தினந்தோறும் காலையில் நடை திறக்கப்பட்டு 9 மணி அளவில் 1,008 வடை மலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறும். இதனை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம். ஒரு நாள் மட்டும் நடைபெறும் வடை மாலை அலங்காரம் மற்றும் அபிஷேகத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து பூஜையில் கலந்துகொள்ளும் கட்டளைதாரர்களுக்கு அபிஷேக முடிவில் பிரசாதம் வழங்கப்படும். 

ஆகவே, வரும் 2023-ம் ஆண்டுக்கான ஆஞ்சநேயர் சாமி அபிஷேக முன்பதிவு நேற்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்தனர். 

மேலும், ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்க ரூ.5 ஆயிரம், வெள்ளிக்கவசத்துக்கு ரூ.750, முத்தங்கி அலங்காரத்துக்கு ரூ.3 ஆயிரம், தங்கத்தேருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments