Monday, March 16, 2026
HomeUncategorizedபெண்களின் துறவறம்...!

பெண்களின் துறவறம்…!

பொதுவாகவே உலகில் கடைபிடிக்கப்பட்டுவரும் மதங்கள் அனைத்துமே, பெண்கள் திருமணம் ஆகாமலே ஆன்மீகநெறியினைப் பின்பற்றி துறவறம் மேற்கொள்வதை வரவேற்கின்றன. உதாரணத்திற்கு சிலப்பதிகாரம் காட்டிய கவுந்தியடிகள், மாதவியின் மகள் மணிமேகலை ஆகியோர் சமணமத மதத் துறவிகளாக துறவறம் பூண்டதைச் சொல்லலாம். 

ஆனால் சனாதன தர்மமான இந்துமதத்தில் மட்டும், பெண்களுக்கு துறவறம் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆண்களைவிட பெண்கள் உடல்வலிமையில் மென்மையானவர்களாக இருப்பினும், மன வலிமையில் மிகவும் உயர்ந்தவர்கள். ஒரு பெண்ணின் கணவர் இளம்வயதிலேயே இறந்துவிட்டால், அந்தப்பெண் மெல்ல மெல்ல அந்த துயரங்களிலிருந்து வெளியேறி, சகஜமான மனநிலை பெற்று, அதன் பின் பல்லாண்டுகள் தன் குழந்தைகளுக்காக வாழ்ந்து,  வாழ்க்கையில் அவர்களைக் கரையேற்றி, அவர்களின் சந்ததியினரான பேரக்குழந்தைகளையும் ஆளாக்கி, அவர்களின் அன்பைப்பெற்று பூரண வாழ்வை வாழ்ந்து செல்கிறார்கள். 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments