மதுரையில் சித்திரை திருவிழா ஏப்.23 ல் துவங்கி நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 டிக்கெட்டுகள் முன்பதிவு நடந்தது. நேரடி மற்றும் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முன்பதிவு நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் மொத்தம் 5,793 பேர்முன்பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களுக்கு இன்று குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு SMS அனுப்பப்படும்.
அவ்வாறு உறுதி செய்யப்பட்ட SMS பெற் றவர்கள் நாளை முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் 12-ந் தேதி மாலை 5 மணி முடிய பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் காண்பித்து பணம் செலுத்தி உரிய நுழைவு கட்டண டிக்கெட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
வெளியூரில் வசிப்பவர்கள் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்

