கோடை காலம் மார்ச் முதல் ஜூன் வரை இருக்கும். இந்த 4 மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பமுள்ள காலம். இது கத்திரி வெயில் எனப்ப டும் அக்னி நட்சத்திரக்காலம் என்று குறிப்பிடப்படுகிறது.
இது நடப்பு ஆண்டு மே 4-ந்தேதி தொடங்கி மே 29-ந்தேதி வரை இருக்கும். கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் எனத் தெரிகிறது. இந்த காலத்தில் குழந்தைகள், முதியோர், பெண்கள் மற்றும் நோயாளி கள் நண்பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக தண்ணீர் பருக வேண்டும். நீர்ச்சத்து பழங்களைச் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவதுடன், வெளியே செல்லும்போது குடையுடன் செல்வதால் கத்திரி வெயிலின் தாக்கத் தில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

