2.42 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றை அச்சிடும் பணி, 2018-2019 நிதி ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை வரை 2.42 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது 72 சதவிகிதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

