Wednesday, March 4, 2026
HomeUncategorizedசென்னை சென்டரல்-திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவை

சென்னை சென்டரல்-திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவை

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களான வந்தே பாரத் ரயில் சேவைகளை நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே அரசு தொடர்ந்து தொடங்கி வைத்து வருகிறது. அதன்படி தற்போது நாடு முழுவதும் 23 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை சென்னை சென்டரல்- மைசூரு மற்றும் சென்னை சென்ட்ரல் – கோவை ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு வழித்தடத்தில் விரைவில் மற்றுமொரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்திற்கு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த சென்னை சென்டரல்-திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவையானது இம்மாதமே தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments