செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புச் சூழல் வேகமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.
சமீபத்திய தரவுகளின்படி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டப் பணிகளுக்காக இந்தியாவில் 83,100 புதிய பணியாளர்கள் புதிதாக வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதே வேளையில், AI பயன்பாட்டின் வருகை, பணியாளர்கள் தானாகவே வெளியேறுதல் (attrition) மற்றும் பணிநீக்கம் (layoffs) காரணமாக 31,921 பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.
AI தொழில்நுட்பம் பாரம்பரிய மற்றும் வழக்கமான பணிகளை முடக்கி வேலை இழப்புகளை ஏற்படுத்தியபோதிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விகிதம் இழப்புகளை விட இருமடங்கிற்கும் அதிகமாக இருப்பது, இந்தியத் தொழில் சந்தை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்டு வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.
