Sunday, March 15, 2026
HomeUncategorizedஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு

ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு

ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு: முதன்மைச் செயலாளர்கள் 7 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

தமிழக அரசில் 1991ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளாக பணியில் சேர்ந்து, தற்போது முதன்மைச் செயலாளர்களாக 7 பேர் பணியாற்றி வருகின்றனர். 

அதில், அயல் பணியாக மத்திய அரசு பணிக்குச் சென்று தற்போது தூத்துக்குடி துறைமுக தலைவராக உள்ள ராமச்சந்திரன், பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக உள்ள கோபாலகிருஷ்ணன், எரிசக்தி துறை செயலாளராக உள்ள ரமேஷ்சந்த் மீனா, நிதித்துறை செயலாளராக உள்ள முருகானந்தம், புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக உள்ள சந்திரகாந்த் காம்ளே, சுற்றுச்சூழல் துறை செயலாளராக உள்ள சுப்ரியா சாகு, சமூக நலத்துறை செயலாளராக உள்ள சம்புகல்லோலிகர் ஆகிய 7 பேரையும் அதே பணியில் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பணி உயர்வு வழங்கி தமிழக அரசு  அரசாணை பிறப்பித்துள்ளது.

 இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments