Tuesday, March 10, 2026
HomeUncategorizedதமிழக சிவலாயங்களில் அன்னாபிஷேகம்

தமிழக சிவலாயங்களில் அன்னாபிஷேகம்

தமிழகத்தில் உள்ள  சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சிவாலயங்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சிவன் காலடியில் படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் காலந்தோட்டும் ஒரு நம்பிக்கை.

அந்த வகையில், ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், தஞ்சை பெரிய கோயில், கங்கைக்கொண்ட சோழப்புரம், திருவண்ணாமலை உள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து சிவலாயங்களிலும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. 

இதில், சிவபெருமாள் பக்தர்களுக்கு அன்னம் மற்றும் காய்கனிகளால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments