‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்’ – என்ற காலத்தால் அழியாத வசனத்தை வழங்கிய ஆர் கே சண்முகம் காலமான தினமின்று
சிவாஜி, எம்.ஜி.ஆரை வைத்து படங்களை இயக்கி, தயாரித்த பி.ஆர்.பந்துலுவிடம் இணை இயக்குநராகவும் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான வசனகர்த்தாவுமாக இருந்தவரிவர்
தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர்.பந்துலுவுடன் பணியாற்றிய ஆர்.கே.சண்முகம் நாகபட்டினத்துக்காரர்.
பந்துலு தயாரித்த #ஆயிரத்தில்_ஒருவன் படம்தான் எம்ஜிஆர்-ருக்கு சண்முகம் வசனம் எழுதிய முதல் படம்.
அதில் ‘உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? என்றேன்றும் நிலைத்திருப்பதற்கு?’ என்று ஆட்சியாளர்களை நோக்கி எம்ஜியார் பேசும் வசனம் முக்கியமானது.
சண்முகத்தின் வசனங்கள் எம்ஜியார் அவர்களை மிகவும் கவர்ந்தன. “இந்த படம் சாகாவரம் பெற்றதாக அமையும்” என்று எம்ஜிஆர் சொன்னது உண்மையாகிவிட்டது.
தமிழ் திரையுலகில் காலம் கடந்து பேசப்படும் படங்களில் ஒன்றாக நிலைத்திருக்கிறது ‘ஆயிரத்தில் ஒருவன்.
‘மதம் கொண்ட யானை என்ன சொய்யும் தெரியுமா?’ என்ற வில்லனின் கேள்விக்கு…’சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப்போகும்’ என பஞ்ச் ஸ்டைலில் ஹீரோ பதிலடி கொடுக்கும் வசனம் தலைமுறை கடந்து இந்த டிஜிட்டல் உலகத்திலும் பேசப்படுகிறது.
16 படங்களில் எம்ஜிஆருக்காக வசனம் எழுதிய சண்முகம், அதிமுக பேச்சாளராகவும் செயல்பட்டுள்ளார்.

