Friday, February 6, 2026
HomeUncategorizedஆடி மாதமும், பெண்கள் மட்டுமே வழிபடும் செவ்வாய் பிள்ளையார் வழிபாடும்!

ஆடி மாதமும், பெண்கள் மட்டுமே வழிபடும் செவ்வாய் பிள்ளையார் வழிபாடும்!

நம் விநாயகர் பெருமானை பக்தர்கள் பல்வேறு விதமாக கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம். அதேபோல விநாயகருக்கு பல்வேறு பிரசாரம் செய்து வழிபடுவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், மோதகப் பிரியரான விநாயகருக்கு விதம்விதமான கொழுக்கட்டைகள் செய்து படைக்கப்படும். உப்புக் கொழுக்கட்டை, வெல்லக் கொழுக்கட்டை, எள் கொழுக்கட்டை, இலைக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, மோதகம் என்று கொழுக்கட்டைகள் பலவிதம். ஆனால்,உப்பில்லாத கொழுக்கட்டை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதற்கு “செவ்வாய்ப் பிள்ளையார்’ கொழுக்கட்டை என்று பெயர். வாங்க செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாட்டு முறையை பற்றி பார்ப்போம்…

ஆடி, தை மாதங்களில் ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் நள்ளிரவில் ஆண்களுக்குத் தெரியாமல், பெண்கள் மட்டுமே 
இவ்வழிபாட்டை செய்வர். இந்த இரண்டு மாதங்களில் வழிபாடு நடத்தத் தவறும் பட்சத்தில் மாசியிலும் நடத்தலாம். தென்மாவட்டங்களில் பரவலாக இவ்வழிபாடு அனுசரிக்கப்படுகிறது. ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் இவ்வழிபாடு பற்றி தெரிய வாய்ப்பில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments