ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் தொடங்கும் முன் வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிடுகிறது. பட்டியலின்படி, அக்டோபரின் 31 நாட்களில் சுமார் 15 நாட்கள் விடுமுறையாக உள்ளது.
இதில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகள் மற்றும் பண்டிகை விடுமுறைகள் அடங்கும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் அக்டோபர் மாதம் ஒரு நாள் வங்கிகள் மூடப்படும்.
காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தசரா, விஜயதசமி, கதி பிஹு மற்றும் தீபாவளி காரணமாக வங்கிகள் வெவ்வேறு நாட்களில் மூடப்பட உள்ளன.
விடுமுறை நாட்கள் விவரங்கள்:
அக்டோபர் 1 – சட்டசபை தேர்தல் காரணமாக ஜம்முவில் வங்கிகள் மூடப்படும் அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
அக்டோபர் 3 – நவராத்திரி விழாவை முன்னிட்டு ஜெய்ப்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை.
அக்டோபர் 6 – ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் விடுமுறை அக்டோபர் 10 – துர்கா பூஜை, தசரா மற்றும் மகா சப்தமி காரணமாக அகர்தலா, கவுகாத்தி, கோஹிமா மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்
அக்டோபர் 11 – தசரா, மஹாஷ்டமி, மகாநவமி, ஆயுத பூஜை, துர்கா பூஜை மற்றும் துர்கா அஷ்டமி காரணமாக அகர்தலா, பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, காங்டாக், கவுஹாத்தி, இம்பால், இட்டாநகர், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை
அக்டோபர் 12 – தசரா, விஜயதசமி, துர்கா பூஜை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
அக்டோபர் 13 – ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
அக்டோபர் 14 – துர்கா பூஜை அல்லது தாசன் காரணமாக காங்டாக் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்படும்
அக்டோபர் 16 – லட்சுமி பூஜை காரணமாக அகர்தலா மற்றும் கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும்
அக்டோபர் 17 – மகரிஷி வால்மீகி ஜெயந்தி மற்றும் காந்தி பிஹு அன்று பெங்களூர் மற்றும் கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை
அக்டோபர் 20 – ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
அக்டோபர் 26 – நான்காவது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
அக்டோபர் 27 – ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
அக்டோபர் 31 – தீபாவளியன்று நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்
UPI மற்றும் நெட் பேங்கிங் சேவை தொடரும்:
பண்டிகைக் காலமான அக்டோபரில் நாட்டின் பல மாநிலங்கள் பல்வேறு பண்டிகைகளில் வங்கிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கின்றன.
வங்கி விடுமுறை நாளாக இருந்தாலும் UPI, Net Banking மற்றும் Mobile Banking ஆகியவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம்.
இது தவிர ஏடிஎம்கள் மூலமாகவும் பணம் எடுக்கலாம்.

