அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞானசேகரன் மீதான இரண்டாவது எஃப்ஐஆர் என்ன ஆனது என்றும், அதிகாரிகளுக்கும் ஞானசேகரனுக்கும் என்ன தொடர்பு என்றும் முதல்வர் ஸ்டாலினும், காவல் துறையினரும் பதிலளிக்க வேண்டும் என்று அண்ணாமலை கேள்வி கேட்டுள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது: டிசம்பர் 23 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது அனைவரும் அறிந்ததே. இதையடுத்து, ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். 25 ஆம் தேதி ஞானசேகரன் யார், என்பதை பேசினோம்.
தற்போது ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகால ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை துரிதமாக விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீருக்கு நியாயம் கிடைக்குமா என்றால் அது கிடைக்காது.
24 ஆம் தேதி ஞானசேகரனை கோட்டூர் காவல் துறையினர் கைது செய்விட்டு அவரை வெளியே விட்டனர். 25 ஆம் தேதி மீண்டும் கைது செய்தனர் . எதற்காக அவரை முதலில் வெளியே விட்டனர். எதற்காக திமுகவில் சில அதிகாரிகள் பதற்றமடைந்தனர். சாட்சிகளை அழித்திருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஞானசேகரனின் தொலைபேசி எண்ணானது “90429 77907”. அரசு வழக்கறிஞர் சொல்கிறார் சம்பவத்தன்று ஞானசேகரனின் மொபைல் இரவு 8.52 மணி வரை பிளைட் மோடில் இருந்தது என்று. உண்மைதான். CDR -ம் அதை தான் சொல்கிறது. நான் இன்றைக்கு தொடரும் கேள்வி திமுக அரசு குறிப்பாக முதலமைச்சர் கிட்ட கேட்கிறேன். முதலமைச்சர் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர் இன்றைக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டிய கடமை கட்டாயம் அவருக்கு உள்ளது.
பிளைட் மோடில் இருந்து எடுக்கப்பட்ட பின்னர் ஞானசேகரன் 8.52 மணிக்கு பிறகு 8.55 மணிக்கு ஒரு காவல்துறை அதிகாரிக்கு தான் முதல் போன் காலை செய்கிறார். காவல்துறை மீது நான் பெரும் மதிப்பு வைத்துள்ளேன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் அந்த காவல்துறை அதிகாரியின் பெயரையும், பதவியையும், அவரது மொபைல் நம்பரையும் நான் வெளியிடவில்லை. 48 மணிநேரம் கழித்து அரசு என்ன சொல்றாங்கனு பார்த்துவிட்டு வெளியிடுகிறேன். 8.55 மணிக்கு காவல்துறை அதிகாரிக்கு செய்த முதல் போன்கால் எதற்காக?. அந்த காவல்துறை அதிகாரி 6 நிமிடங்கள் கழித்து 9.01-க்கு திரும்ப ஞானசேகரனை அழைக்கிறார்?. எதற்காக?. காவல் துறை அதிகாரிகள். விசாரித்தீர்களா? காவல்துறை அதிகாரிக்கு ஞானசேகரன் என்ன ரிப்போர்ட் பண்றான்னு குற்றம் செய்த பிறகு. அதை chargesheet-ல் கொண்டு வந்தீங்களா? அதிகாரிக்கும் ஞானசேகரனுக்கும் என்ன தொடர்பு?.
இதை ஏன் நான் திரும்ப திரும்ப கேட்கிறேன் என்றால் மே 16-ந்தேதி ஞானசேகரன் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் 2-வது FIR பதிவு செய்துள்ளனர்..மே 16-ந்தேதி பதிவு பண்ண 2-ஆவது FIR-ஐ ரகசியமாக வைத்துள்ளனர். ஆனால் நமக்கு சொல்லலை. பாலியல் வன்கொடுமை மற்றும் ஒரு வழக்கு ஞானசேகரன் மீது மே 16 ஆம் தேதி சிபிசிஐடி பதிவு செய்கிறது. அது என்ன நிலைமையில் இருக்கிறது தெரியாது? அதைதான் கேட்கிறேன். 170 வட்டச் செயலாளர் திமுக கோட்டூர் சண்முகமும், ஞானசேகரனும் 25 ஆம் தேதி 6 முறை பேசியுள்ளனர். எதற்காகப் பேசினர் என்று கேள்வி கேட்டு பெரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
