சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து வேலூர் கண்ட்டோண்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, தினமும் திருவண்ணாமலை வரை நீட்டித்து கடந்த வாரம் தெற்கு ரயில் திருச்சி கோட்டம் உத்தரவிட்டது.
அதோடு, இந்த ரயில் சேவை இன்று(2ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை பீச் ஸ்டேஷனிலும், திருவண்ணாமலையில் நாளை(3ம் தேதி) அதிகாலை 4 மணிக்கும் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
இதனால் பொதுமக்கள்பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில், நிர்வாக காரணங்களால் அந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் நேற்று மாலை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் நாளை அதிகாலை 4 மணிக்கு ரயில் புறப்பட்டு இரவு 9.50க்கு சென்னை வந்தடையும் எனவும் மறுமார்க்கமாக சென்னையில் நாளை மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
