Monday, April 20, 2026
Homeஉலகம்இந்தியா–தென் கொரியா உறவு வலுப்படும்: பிரதமர் மோடி–லீ ஜே மியுங் சந்திப்பு!

இந்தியா–தென் கொரியா உறவு வலுப்படும்: பிரதமர் மோடி–லீ ஜே மியுங் சந்திப்பு!

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று (ஏப்ரல் 20), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் (Lee Jae-myung) அவர்களும் சந்தித்து மிக முக்கியமான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ‘சிறப்பு மூலோபாயக் கூட்டாண்மையை’ (Special Strategic Partnership) வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், கப்பல் கட்டுதல், வர்த்தகம், முதலீடுகள், செயற்கை நுண்ணறிவு (AI), செமிகண்டக்டர் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் டாலராக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதுடன், உலகளாவிய விநியோகச் சங்கிலி (Supply Chain) மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments