Monday, April 20, 2026
Homeசெய்திகள்வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு முடியும் 23-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடி சீல் வைக்கத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு போட்டுள்ளது.

“ஜனநாயகக் கடமையை ஆத்தணும்னா மொதல்ல இந்த சரக்குக் கடைக்கு லீவு விட்டாதான் உருப்படும்” என அதிகாரிகள் முடிவெடுத்தாலும் எடுத்தாங்க, நம்ம ஊரு குடிமகன்கள் இப்போதே ‘சரக்கு ஸ்டாக்’ வைக்க முண்டியடித்துக் கொண்டு கடைகளில் தவம் கிடக்கத் தொடங்கிவிட்டார்கள்.

என்னதான் குவார்ட்டர் பாட்டிலை முன்கூட்டியே வாங்கிப் பதுக்கி வச்சாலும், எலக்ஷன் ஸ்குவாட் கண்ணுல சிக்குனா மொத்தமா ‘காலி’ பண்ணிடுவாங்க… அப்புறம் ஓட்டுப் போடுற அன்னைக்குத் தொண்டை காஞ்சுதான் கிடக்கணும்; அதனால ஸ்டாக் வைக்கிறவங்க கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க, இல்லேன்னா இந்த மூணு நாளும் உங்களுக்குத் ‘திண்டாட்டம்தான்’!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments