ஈரானில் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த அக். 7-ம் தேதியில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் பல்வேறு தாக்குதல்களை நடத்தியதற்கு பதிலடி என ராணுவம் அறிவித்துள்ளது.

