Home Uncategorized கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி

“ஏப்ரல் மாதத்துக்குள் ஆம்னி பேருந்து நிறுத்தும் இடம் பயன்பாட்டுக்கு வரும்” “2 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றி தேவையற்ற வதந்தி பரப்புகிறார்கள்”

“80% பேருந்துகள் கிளாம்பாக்கத்திலும், 20% பேருந்துகள் மாதவரத்தில் இயக்கம்” “கோயம்பேட்டிலும் நள்ளிரவு 12 மணி முதல் 4 மணி நேரத்தில் பேருந்துகள் இயக்குவதில்லை”

“இந்த சமயத்தில் இரண்டு நாட்களாக பிரச்சினை தொடருவது உள்நோக்கம் என சந்தேகம் எழுகிறது” “ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றிக் கொள்ள இரண்டு இடம் அனுமதிக்கப்பட்டுள்ளது”

“அதிகப்பட்சமாக 585 ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன” “கோயம்பேடு ஆம்னி பேருந்து மீண்டும் இயங்குவது போன்று தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள்”

“இந்த சமயத்தில் இரண்டு நாட்களாக பிரச்சினை தொடருவது உள்நோக்கம் என சந்தேகம் எழுகிறது” “நேற்று முன் தினம் வழக்கத்தை விட திருச்சிக்கு 70 பேருந்துகள் கூடுதலாகவே இயக்கம்”

“பேருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நள்ளிரவு நேரத்தில்தான் எழுந்துள்ளது; காலை, மாலை போன்ற நேரத்தில் பிரச்னை இல்லை” “நேற்று முன்தினம் இரவு 133 பேருந்துகள் திருச்சிக்கு சென்றன; அதிகப்படியான பயணிகள் வருகையால் 130 கூடுதல் பேருந்துகள் அனுப்பப்பட்டன” “அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர்”

“கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்குவது போன்ற தோற்றத்தை சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் செய்கின்றனர்” “முடிச்சூர் பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்”

Exit mobile version