கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தனது உரையை துவங்கினார்.
இந்தியாவில் உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது.
ஒமிக்ரான் பரவலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை – பிரதமர் மோடி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கைகளை கழுவ வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்.
குழந்தைகளுக்காக 90,000 படுக்கைகள், 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன – பிரதமர் மோடி
தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது- பிரதமர் நரேந்திர மோடி
மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
நாட்டில் 61% பொதுமக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி.
இந்தியாவில் இதுவரை 141 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
18 வயதுக்கு மேற்பட்டோரில் 90% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி

