Home Uncategorized கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: அவல் லட்டு செய்வது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: அவல் லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : 

அவல் – 400 கிராம், நெய் – 200 கிராம்,  சீனி – 400 கிராம்,  முந்திரிப் பருப்பு – 25 கிராம்,  ஏலக்காய் – 5 எண்ணம்

செய்முறை:

முதலில் சிறிதளவு நெய்யை கடாயில் விட்டு அவலைப் போட்டு வறுக்கவும். அவல் பொரிய ஆரம்பிக்கும் போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பின் அவலை ஆற வைத்து பின் மிக்ஸியில் போட்டு கொர கொர என அடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொர கொரவென அடித்து வைத்துள்ள அவல், பொடியாக்கி உள்ள சீனி பொரித்து வைத்துள்ள முந்திரி பருப்பு, பொடித்துள்ள ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டு ஒருசேர கலக்கவும்.

பின் அதனுடன் உருக்கிய நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து லட்டுகளாகப் பிடிக்கவும். சுவையான அவல் லட்டு தயார். இந்த லட்டை சிறுவர்கள் விரும்பி உண்பர். இதனை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.

Exit mobile version