Home Uncategorized கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.

அறுவடைக்கு முன் நெற்கதிர்கள் கோவிலில் வைத்து பூஜிக்கப்படுவதே நிறை புத்தரிசி பூஜை .

இந்த பூஜையை செய்வதன் மூலம், ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது ஐதீகம்.

குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வயல்களில் பயிரிடப்பட்ட கும்பப்பூ பருவ நெற்பயிர்கள், தற்போது, அறுவடைக்கு தயாராக உள்ளன.

இங்கிருந்து, நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, குமரி அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடந்தன.

அதன்பின், மேளதாளத்துடன், இந்த நெற்கதிர்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு நெற்கதிர்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, பூஜைகள் நடந்தது.

Exit mobile version