Tuesday, March 10, 2026
HomeUncategorizedகாலநிலை மாற்றத்தால் 'மெட்ராஸ் ஐ' பரவி வருகிறது.

காலநிலை மாற்றத்தால் ‘மெட்ராஸ் ஐ’ பரவி வருகிறது.

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மெட்ராஸ் ஐ ஆகும்.

இது காற்று மூலம் பரவுகிறது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தினால், அவர்களுக்கு அந்நோய் தொற்று பரவும்.

மெட்ராஸ் ஐ எளிதில் குணப்படுத்தக்கூடியது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைப் பெற வேண்டும். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் வெளியேறிக் கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை மெட்ராஸ் ஐ அறிகுறிகளாகும்.

மெட்ராஸ் ஐ வந்தால் தனியாக இருக்க வேண்டும். தனியாக டவல், சோப்பு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். கண் வலி தான் என்று மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. சில நேரங்களில் கருவிழி பாதிப்பு கூட ஏற்படலாம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments