Home Uncategorized மழை இல்லாததால் வெயில் தாக்கம் கூடும்

மழை இல்லாததால் வெயில் தாக்கம் கூடும்

கோடையில் 3 முதல் 4 மாதங்களுக்கு (ஜன. முதல் ஏப். வரை) மழை இல்லாததால் வெயில் தாக்கம் கடுமையாக தெரியும். ஆகஸ்டில் தென்மேற்கு பருவமழையால் பூமி கொஞ்சம் ஈரமாகி வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும்.

66 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்டில் புயல் தோன்றியது போல கடந்த மாதம் வங்காள விரிகுடா, அரேபிய கடல்களில் இரண்டு புயல்கள் உருவாகின. இந்த புயல் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிட்டன. சூரியன் இன்னமும் வடக்கு அரைகோளத்தில் (செப்.21 வரை) அதாவது தமிழகத்தின் நேர் மேலாக இருக்கிறது.

கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் மழை எங்கும் பதிவாக வில்லை. வெறும் துாறலாக அதிகபட்சம் 5 மி.மீ., அளவுக்கே பெய்துள்ளதால் சூரியஒளியானது பூமியை வேகமாக வெப்பப்படுத்துகிறது. அதனால் கோடைகாலத்தில் உள்ள வெப்பநிலையை இப்போது நாம் உணர்கிறோம்.

முன்பு மரங்கள் அதிகமாக இருந்தது, வாகனங்கள், கட்டடங்கள் அதிகமாக இல்லை. இப்போது தலைகீழ் மாற்றமாகி விட்டது. காலநிலை மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம். மழையிருந்தால் இந்த வெப்பம் உணரப்பட்டிருக்காது.

இப்போதுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி அடுத்த 2 நாட்களுக்குள் திருச்சி, கடலோர மாவட்டங்களில் சாரல் மழை வர வாய்ப்புள்ளது.

Exit mobile version