எல்லா நாட்களும் இறைவனை வழிபட ஏற்ற நாட்கள்தான். அவற்றில் சில மாதங்கள் சிறப்பு கொண்டவை. அவற்றுள், மார்கழி மாதம் மகிமைகள் பொருந்திய மாதம் ஆகும். இறைவன் காலத்தின் வடிவானவர். ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன்’ என்று கிருஷ்ண பரமாத்மா அருளியிருக்கிறார்.
இந்த மாதத்தை நோன்பு மாதம் என்றும் சொல்வதுண்டு. பாவையர் நோன்பிலிருந்து நல்கணவனைப் பெறுவார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. மார்கழியில் பாவையர் நோன்பிருந்து வழிபட தை பிறந்தவுடன் அவர்களின் விரதத்தின் பயனாக நல்லதொரு வழி பிறந்து அவர்களின் நோக்கம் நிறைவேறும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. ஆகவேதான் சைவ வைஷ்ணவர்கள் இந்த மாதத்தினை சிற்ப்பாக நோன்பிருந்து கொண்டாடி வழிபட என்று வகுத்துள்ளனர்.
வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண்மணியாக உள்ள ஆண்டாள் மார்கழி நோன்பிருக்க என திருப்பாவை பாடி அளித்துள்ளார். சைவக்குறவர்கள் நால்வரில் கடைசீயான மாணிக்கவாசகப் பெருந்தொகை திருவெம்பாவை எனவும் திருப்பள்ளி எழுச்சி எனவும் இந்த மார்கழி மாதத்திற்கு எனவே பாடி வழிபட அளித்துள்ளார்.
இந்த இருவரும் அளித்துள்ள பாடல்கள் யாவும் மிகச் சிறந்தவை. பாடி வழிபட, பலன் அளிக்கக்கூடியவை. இந்த இருவரும் அளித்துள்ள பாடல்கள் யாவும் மிகச் சிறந்தவை. பாடி வழிபட, பலன் அளிக்ககூடியவை.
மேலும், மார்கழி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கோலம் தான். மார்கழி மாதத்தின் அதிகாலையில், ஓஸோன் படலம் வழி, ஆரோக்கியமான, உடல் நலனைத் தரும் காற்று அதிகம் பூமியில் இறங்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓஸோன் நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதால்தான் மார்கழி அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறினர்.

