Home செய்திகள் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு – கர்நாடகாவில் தீவிரமடையும் போராட்டங்கள்!

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு – கர்நாடகாவில் தீவிரமடையும் போராட்டங்கள்!

தமிழகத்திற்குக் காவிரி நீரத் திறந்துவிடக் காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) நாள்தோறும் 3,500 கனஅடி நீர் வீதம் 15 நாட்களுக்கு வழங்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவின் பெங்களூரு, மாண்டியா மற்றும் மைசூர் ஆகிய காவிரி பாசனப் பகுதிகளில் பல்வேறு கன்னட அமைப்புகள், விவசாயச் சங்கங்கள் மற்றும் திரையுலகினர் சார்பில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

மாண்டியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சாலை மறியல்கள், பேரணிகள் மற்றும் திடீர் ஆர்ப்பாட்டங்களால் நெடுஞ்சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், திரையரங்க முற்றுகை மற்றும் கடையடைப்பு முயற்சிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

கர்நாடக அணைகளில் குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ள நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி, அம்மாநில அரசு பிறப்பித்த உத்தேச முடிவுகளுக்கு ஆதரவாகவும், ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராகவும் விவசாயிகள் அம்மாநிலம் முழுவதும் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version