தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, தலா ரூ.4000 வழங்கும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் வைத்தார்
இலங்கை தமிழர் அகதிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கும் திட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
முகாம்களுக்கு வெளியே உள்ள இலங்கை தமிழர் அகதிகள் குடும்பத்தினருக்கு ரூபாய்4000 நிவாரணத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
முகாம்களுக்கு வெளியேயுள்ள இலங்கை தமிழர் அகதிகளுக்கு ரூ 4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழகமுதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.
பின்னர்செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையின நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறைஅமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-
இலங்கை தமிழர் அகதி முகாமில் உள்ளவர்களுக்கு ரூபாய் 4000 நிவாரணமாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
13,553 குடும்பங்களுக்கு 5 கோடி 42 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை வழங்கும் திட்டத்தின் துவக்கமாக 5 பேருக்கு முதல்வர் நிவாரண தொகையை வழங்கினார். இவ்வாறு அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பயனாளிகள் :-
முதல்வர் அவர்கள் முகாம்களுக்கு வெளியே வாழும் மக்களுக்கு இந்த படியை வழங்கி உள்ளார் அவருக்கு நன்றி.
துறைசார்ந்த அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
முகாம்களில் உள்ள தமிழர்களை போலே வெளியில் உள்ள தமிழர்களுக்கும் இந்த உதவியை செய்துள்ளார்.
ஈழ தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
