Friday, May 1, 2026
Homeசெய்திகள்மும்பை–புனே ‘மிஸ்சிங் லிங்க்’ திறப்பு – 30 நிமிடம் சேமிக்கும் சூப்பர் பாதை!

மும்பை–புனே ‘மிஸ்சிங் லிங்க்’ திறப்பு – 30 நிமிடம் சேமிக்கும் சூப்பர் பாதை!

மும்பை – புனே இடையிலான பயணத்தை இனிமையாக்கப் போகும் ‘மிஸ்சிங் லிங்க்’ (Missing Link) திட்டம், மகாராஷ்டிரா தினமான இன்று (மே 1, 2026) அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்படுகிறது.

சுமார் 6,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 13.3 கி.மீ தூரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய வழித்தடம், மும்பை – புனே எக்ஸ்பிரஸ்வேயில் விபத்துக்கள் அதிகம் நிகழும் ‘கண்டாலா காட்’ (Ghat) பகுதியைத் தவிர்த்துச் செல்ல உதவுகிறது.

இதன் மூலம் பயண தூரம் சுமார் 6 கி.மீ குறைவதோடு, பயண நேரம் 20 முதல் 30 நிமிடங்கள் வரை மிச்சமாகும். ஆசியாவிலேயே மிக நீண்ட சுரங்கப்பாதைகளில் ஒன்றான 8.9 கி.மீ நீள சுரங்கப்பாதை மற்றும் டைகர் வேலி (Tiger Valley) பகுதியில் 180 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ‘கேபிள் ஸ்டேடு’ பாலம் ஆகியவை இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாகும்.

முதற்கட்டமாக இலகுரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் சுங்கக் கட்டணம் ஏதுமின்றி இந்தச் நவீனப் பாதையைப் பொதுமக்கள் இன்று நள்ளிரவு முதல் பயன்படுத்தலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments