நாடு முழுவதும் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாமில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம். கடந்த முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் அனைவரும் இந்த மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

