Friday, March 13, 2026
HomeUncategorizedஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான்- ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.

ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான்- ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.

இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

விவசாயிகளின் வளர்ச்சிக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது; வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.

 மழை, வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6230 கோடி நிதி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 25,345 அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்.

நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது.

நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.

நீட் தேர்வு தேவையில்லை  என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது

-ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments