Wednesday, September 23, 2026
HomeUncategorizedபெண் காவலரிடம் சில்மிஷம் செய்த துணை வட்டாட்சியர் கைது

பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த துணை வட்டாட்சியர் கைது

நீலகிரியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த பறக்கும் படையை சேர்ந்த பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சோதனை பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம், அங்கு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வந்த துணை வட்டாட்சியர் பாபு சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் காவலர் மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து துணை வட்டாட்சியார் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்த போலீசார், பின்னர் குன்னூர் சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments