Home Uncategorized புதுகை புலவர் இரா சந்திரசேகரன் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு – மரபின்மைந்தன் முத்தையா...

புதுகை புலவர் இரா சந்திரசேகரன் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு – மரபின்மைந்தன் முத்தையா அறிக்கை

புதுக்கோட்டையைச் சார்ந்த புலவர் இரா சந்திரசேகரன் அவர்கள். தமிழ் இலக்கியத்தை எழுத்தெண்ணிப் படித்த சான்றோர்கள் வரிசையின் கடைசிக் கண்ணியில் ஒரு தங்க வளையமாய் திகழ்ந்தவர்.
திருமுறைகள் கம்பராமாயணம் திவ்ய பிரபந்தம் என பரந்துபட்ட பார்வையும் ஆய்வும் உடையவர். 

பள்ளித் தலைமை ஆசிரியராய் பெருமைமிக்க பேச்சாளராய் இலக்கிய அமைப்புகளில் இணைந்து பணிபுரிந்த செயல் செம்மலாய் விளங்கிய பெருமகன் நேற்று மறைந்தார் என்னும் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.

அவருடைய மூத்த மகள் இலக்கிய உலகில் அவரது வாரிசாய் வளர்ந்து வரும் பைந்தமிழ் செல்வி புதுகை .ச.பாரதி அயல்நாட்டில் பணி புரியும் இளையமகள் வித்யா மற்றும் அனைவருக்கும் கை மணக்க மணக்க உணவு படைப்பதில் தனி விருப்பம் காட்டும் அவருடைய துணைவியார் திருமதி ஜெயா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 
விடைபெற்ற வித்தகருக்கு வணக்கமும் அஞ்சலியும்.

Exit mobile version