நடிகர் ரஜினிகாந்த் தனது 72-வது பிறந்த நாளை தனது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்தன.
தனது குடும்ப உறுப்பினர்களுடன், குறிப்பாக அவரது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவிட்டார் ரஜினிகாந்த். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளங்களில் அந்தப் படத்தைப் பகிர்ந்து, “இதைவிட அழகான ஒன்றை படம் பிடிக்க முடியாது. இதுபோன்ற சில பிணைப்புகளுக்கு தலைப்பிட முடியாது. எனது பர்த்டே பாயுடன் என் பையன்களுடன்!” எனக் குறிப்பிட்டிருந்தார்.
பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட அந்தப் படம் இணையத்தில் வைரலானது. அதே நேரத்தில் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருப்பதாக கமெண்டுகளில் தெரிவித்தனர் ரசிகர்கள். ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான படங்களைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

