சபரிமலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை மேல் சாந்தியாக பணிபுரிந்த 28 முன்னாள் மேல் சாந்திமார் பங்கேற்ற சிறப்பு லட்சார்ச்சனை
இதில் தற்போதைய சபரிமலை, மாளிகப்புரம் மேலசாந்திகளும் கலந்து கொண்டனர்.
வழக்கமான பூஜைகளுக்குப் பிறகு கிழக்கு மண்டபத்தில் தந்திரி கண்டரர் ராஜீவ் தலைமையில் பிரம்ம கலசம் நிரப்பப்பட்டது. கலசத்தை சுற்றி அமர்ந்திருந்த முன்னாள் மேல் சாந்திமார் ஐயப்ப சஹஸ்ரநாமம் முழங்க லட்சார்ச்சனை செய்யப்பட்டது.

