பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால் முன்பே அறிவித்திருந்த அரையாண்டு விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
