Monday, July 13, 2026
Homeலைஃப்ஸ்டைல்தூங்கும் முன் வரும் அந்த சில நொடிகள்... உங்கள் மூளையின் சூப்பர் பவர்!

தூங்கும் முன் வரும் அந்த சில நொடிகள்… உங்கள் மூளையின் சூப்பர் பவர்!

விழித்திருப்பதற்கும் தூங்குவதற்கும் இடைப்பட்ட அந்த ஒரு சில நொடிகள் அல்லது நிமிடப் பொழுதுகளில், மனித மூளை மிகவும் தீவிரமாகச் செயல்பட்டுப் புதிய யோசனைகளையும் கடினமான புதிர்களுக்கான தீர்வுகளையும் கண்டறிகிறது என்ற வியப்பூட்டும் தகவலை விஞ்ஞானிகள் தங்களது புதிய ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

விழிப்பு நிலைக்கும் ஆழ்ந்த உறக்க நிலைக்கும் நடுவில் இருக்கும் இந்த ஒருவித ‘கனவு போன்ற தியான நிலையை’ (Hypnagogia) அடையும் நபர்களுக்கு, வழக்கத்தை விடவும் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறன் (Creativity) பன்மடங்கு அதிகரிப்பதுடன், அவர்கள் எவ்வளவு பெரிய சிக்கலான கணக்குகளையும் அல்லது பிரச்சனைகளையும் மிக எளிதாகத் தீர்த்துவிடுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாம் ஏதேனும் ஒரு புதிய யோசனைக்காகவோ அல்லது விடை தெரியாத கேள்விக்காகவோ விடிய விடியக் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்றும், படுக்கைக்குச் சென்று நாம் தூங்கி விழப் போகும் அந்த ஒரு சில நொடிப் பொழுதே நமக்கான மிகச்சிறந்த ஐடியாவைத் தந்துவிடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே, உங்களுடைய அடுத்த மாபெரும் சாதனைக்கான ஒரு சிறந்த ஐடியா அல்லது திட்டம், நாளை விடியற்காலையில் கிடைக்கப் போவதில்லை, மாறாக நீங்கள் இன்றிரவு தூங்கப் போகும் அந்த ஒரு மாயாஜால நொடியில்தான் ஒளிந்திருக்கிறது என்பதே இந்த ஆய்வின் சுவாரசியமான முடிவாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments