கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ‘இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை’ குறித்த ஆய்வில், இந்தியாவில் பட்டம் பெற்ற இளைஞர்களில் சுமார் 40 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதிக்கும், சந்தையில் கிடைக்கும் வேலைகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி மற்றும் போதிய வேலைவாய்ப்பு உருவாக்கமின்மை ஆகியவையே இந்த அவலநிலைக்கு முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
குறிப்பாக, உயர்கல்வி கற்றவர்களிடையே நிலவும் இந்த வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
