சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண நாடு முழுவது இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இதிலும், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம்.
இத்தகைய பக்தர்களின் வசதிக்காக, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னையில் இருந்து பம்பைக்கு வருகிற 17-ந்தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதில் பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் ஆகும். இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவை ஜனவரி 18-ந்தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வசதியினை பக்தர்கள் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
