Monday, March 2, 2026
HomeUncategorized`திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி!' - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

`திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி!’ – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

“திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி. தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் அதை கைவிட வேண்டும்.” – எடப்பாடி பழனிச்சாமி 

எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி, “இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்பொழுது அதில் வரக்கூடிய, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும்.

இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி. திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி. திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு. தமிழக மக்களின் உணர்வைப் புண்படுத்தும், திராவிட பண்பாட்டைச் சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்திருந்தாலும் கைவிட வேண்டும்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments