ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் காஷ்மீருக்கு தனது தேனிலவைக் கொண்டாட வந்த கடற்படை அதிகாரியும் ஒருவர் .
ஹரியானாவைச் சேர்ந்தவரும் கொச்சியில் பணிபுரியும் 26 வயதான கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார்.
வினய் நர்வாலுக்கு ஆறு நாட்களுக்கு முன்புதான் (ஏப்ரல் 16 ) ஹிமான்ஷி என்பவரிடம் திருமணம் நடந்தது.
திருமணத்திற்காக விடுமுறையில் இருந்த வினய், தேனிலவைக் கொண்டாட ஹிமான்ஷியுடன் காஷ்மீருக்கு வந்தார். ஆனால் திருமணத்தின் ஆறாவது நாளே இப்படி ஒரு பெரும் சோகம் ஏற்படும் என்று கனவிலும் நிலைத்திருக்க மாட்டார்
