Thursday, March 5, 2026
HomeUncategorizedதிடீரென வந்த முதல்வர் அதிர்ந்த ரேசன்கடை ஊழியர்கள்...!

திடீரென வந்த முதல்வர் அதிர்ந்த ரேசன்கடை ஊழியர்கள்…!

சென்னை  ராயப்பேட்டையில் உள்ள நியாயவிலை கடை ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்

.மக்களுக்கு உரிய வகையில் 14 வகை மளிகை பொருட்கள் சென்று சேர்கிறதா, 2000 ரூபாய் நிவாரணத் தொகை சரியாக கொடுக்கப்படுகிறதா என்பதை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

முதல்வரின் கார் எங்கோ கிளம்பி செல்வதை அறிந்து கொண்டு முதல்வர் இல்லத்துக்கு வெளியே இருந்த பத்திரிகையாளர்கள் அவரை பின்தொடர்ந்து சென்ற போதுதான் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு நடத்துவது தெரியவந்தது. ரேஷன் கடையில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் போதிய அளவு மளிகை சரக்குகள் இருப்பு இருக்கிறதா என்பது பற்றியும் ஊழியர்கள் வந்துள்ளனரா என்பதை பற்றியும் நேரில் பார்த்து உறுதி செய்தனர். மேலும் அங்கு வந்திருந்த பொதுமக்கள் சிலருக்கு தங்கள் கைகளால் நிவாரணப் பொருட்களையும் பணத்தையும் வழங்கி கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.

முதல்வர் இவ்வாறு திடீரென விசிட் செய்ததால் ரேஷன் கடை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. ஊழியர்கள் பரபரப்புடன் வேகமாக வேலை பார்க்க ஆரம்பித்தனர். எப்போது எந்த ஊர் ரேஷன் கடைக்கு முதல்வர் வருவாரோ என்ற எதிர்பார்ப்பு காரணமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் நியாய விலை கடை பணியாளர்கள் துரிதமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

 எனவே முதல்வர் இதுபோல அப்போது மக்கள் நல பணிகளை திடீரென நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments