சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தியாகராய நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ரங்கநாதன் தெரு, நடேசன் தெரு, மாம்பலம் மார்க்கெட், ராமேஸ்வரம் தெரு ஆகிய பகுதிகளில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பலரும் புகார் அளித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திநகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். ரங்கநாதன் தெருவில் 52 கடைகள், நடேசன் தெருவில் 40 கடைகள், மாம்பலம் மார்க்கெட்டில் 40 கடைகள், ராமேஸ்வரம் தெருவில் 20 கடைகள் என மொத்தம் 150 கடைகள் அகற்றப்பட்டன

