Monday, March 2, 2026
HomeUncategorizedதமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை - ஆளுநர் விளக்கம்

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை – ஆளுநர் விளக்கம்

டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் முதல்வர்,எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் எதிர்ப்பை மீறி  இந்தி தின விழா இன்று (18-10-24) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக  கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது: 

“இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள் தான். இங்கு இந்தி திணிக்கப்படவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்தி கற்க மாட்டார்கள், இந்தி எதிர்ப்பு உள்ளது என்று முன்பு நினைத்திருந்தேன். ஆனால், பல பகுதிகளுக்கு நான் சென்ற பின்னர் தான் தமிழ்நாட்டில் இந்தி மொழியை மக்கள் கற்பது தெரிந்தது. தமிழக மக்களிடையே இந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் நீக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது. இந்தியா எப்போதும் ஒன்றாகவே உள்ளது. எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. இந்தியாவின் அங்கமாக தமிழ்நாடு எப்போதும் இருக்கும். இந்தியாவின் பெருமை மிகு மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இங்கிருந்து ஆன்மீகம் நாடு முழுவதும் சென்றுள்ளது. 

தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல என்ன செய்தனர்?. தமிழகத்தில் மட்டுமே 3வது மொழியை அனுமதிக்க மறுக்கின்றனர். பிற மாநிலங்களில் அனுமதிக்கின்றனர். மக்களை கொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர். தமிழுக்காக மத்திய அரசும், பிரதமர் மோடியும் மட்டுமே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்” என்று பேசினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments