ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு போராடி உயிரிழந்த இளைஞர் – VIT கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்கள் புகார்
நேற்று(06/10/24) மாலை 4 மணியளவில் வேலூர் VIT கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் ஓடும் ரயிலில் இருந்து ஒருவர் கீழே விழுந்துள்ளார்
அதை கல்லூரி விடுதியின் 8-வது மாடியில் இருந்து பார்த்த வட மாநில மாணவர்கள் சிலர், கல்லூரி வார்டன் மற்றும் காவலர்களுக்கு தகவல் தெரிவித்து உதவுமாறு வலியுறுத்தி உள்ளனர்
ஆம்புலன்ஸை அழைக்கவோ அல்லது வரும் ரயில்களை நிறுத்துமாறு ரயில்வே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவோ மாணவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது
இதை கண்டுள்ளாத அவர்கள், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்து தலையிட மறுத்துவிட்டனர்
‘காயமடைந்தவர் உயிருடன் இருந்தால், அவர் தானாகவே தண்டவாளத்தை விட்டு நகர்வார்’ என்றும் கல்லூரியின் காவலர் மனிதாபாமானம் இல்லாமல் கூறி இருக்கிறார்
கல்லூரியின் பல அதிகாரிகளை மாணவர்கள் தொடர்பு கொள்ள முயன்றும் சரியான நேரத்தில் உதவி பெற முடியவில்லை
துரதிர்ஷ்டவசமாக, 50 நிமிடத்திற்குப் பிறகு, ஒரு அதிவேக ரயில் அந்த நபர் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார்
இந்த சம்பவத்தை வீடியோக்கள் மற்றும் படங்களை எடுத்த VIT கல்லூரி மாணவர்கள், ‘இது ஒரு விபத்து அல்ல என்றும் மனிதர்களின் அலட்சியத்தால் நடந்த கொலை’ என்றும் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்

