நம் முன்னோர்கள் தங்களின் வாழ்வியல் முறையில் பல மரங்கள் உடன் இணைந்து வாழ்ந்தார்கள். சுற்றி வந்து வாழ்ந்த ஒரு மரம் தான் அரசமரம். பெயரை கேட்டால் போல் அரசமரம் மிகவும் உயர்ந்ததாக இருக்கும் பிரம்மாண்டமாகவும் இருக்கும்.
கோயில் குளக்கரைகளில் அரச மரங்கள் வைத்து வழிபாடு செய்தார்கள். இவ்வாறு அரச மரத்தை சுற்றி வரும் பொழுது அவர்களுக்கு உடலுக்கு தேவையான பிராணவாயு கிடைத்து அவர்களுக்கு மூளை இன் செயல் திறனை அதிகரித்து மன அமைதியைப் பெற்று இன்புற்று வாழ்ந்தார்கள்.
பொதுவாக மன அமைதியாக இருப்பவர்களுக்கு உடலில் நோய் கோளாறுகள் எதுவும் வராது. தற்போது மக்கள் வாழ்ந்து வரும் வாழ்வியல் மாற்றங்களினால் அவர்கள் எதிர்கொள்ளும் பலவிதமான மன அழுத்தங்களின் காரணமாக சிறு வயது முதல் அவர்கள் பலவிதமான நோய்களை எதிர்கொள்ள வேண்டிய காரணமாகிறது.
இயற்கையாகவே இந்த விதமான மன அழுத்த நோய்களையும் அதன் பாதிப்புகளையும் குணப்படுத்த நாம் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையை கையாள வேண்டும்.
அரச இலை கசாயம்
- ஐந்து அரச இலைகளை நன்றாக தூய்மை செய்து சிறு துண்டுகளாக நறுக்கி மூன்று டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆணை பின்பு வடிகட்டி சிறிது மிளகுத்தூள் சேர்த்து நாட்டு சக்கரை கலந்து குடிக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
- குழந்தையின்மையால் மன நிம்மதியை இழந்த தம்பதியர்கள் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு மன நிம்மதி பெற்று உடலிலும் மனதிலும் ஆனந்தம் பெறுவார்கள்.
- தினமும் அரச மரத்தை சுற்றி வந்து அரை மணி நேரம் மரத்தடியில் அமர்ந்து நல்ல புராண வாயுவை எடுத்துக் கொண்டால் இயற்கையாகவே ஹார்மோனல் பேலன்ஸ் என்று சொல்லக்கூடிய வேதி மாற்றங்கள் முறையாக செயல்படும்.இதனால் பெண்களுக்கு கருப்பை வலுவடைந்து மாதவிடாய் கோளாறுகள் தீரும்.ஆண்களுக்கு விந்து அளவும் விந்து எண்ணிக்கை அளவும் அதிகரித்து குழந்தை பாக்கியம் பெறுவார்கள்.
- இந்த கசாயத்தில் விட்டமின் கே சத்து உள்ளதால் எலும்புகள் வலுவடையும் மற்றும் நாள்பட்ட புண்களும் மாறும்.
- இதில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்சும் வயிற்று நியூட்ரியன்ட்களும் சருமத்தில் கொலாஜின் புரொடக்ஷனை அதிகரித்து சரும சுருக்கம் தடுத்து என்றும் இளமையாக வைத்திருக்கும்.
- நீரிழிவு நோய்,கேன்சர் நோய்,உயர் ரத்த அழுத்த நோய் கல்லீரல் நோய் சிறுநீரக கல் நோய் போன்ற பலவிதமான நோய்களில் இருந்து நம்மளை பாதுகாக்க இந்த கசாயம் உதவியாக இருக்கிறது. எந்த ஒரு நோய் தொந்தரவும் உடலே அணுக கூடாது என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக அரச இலை கசாயத்தை பயன்படுத்தலாம். இதை ஒரு நோய் தடுப்பு மருந்தாக நம் வாழ்வில் அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
- இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வலியை உண்டாக்கும் அறிகுறிகளை உடலில் குறைக்கும். மற்றும் வாய் துர்நாற்றத்தையும் குறைக்கும்.
- பிராங்கியடீஸ், ஆஸ்துமா,நிமோனியா போன்ற நுரையீரல் சம்பந்தமான சுவாச நோய்களின் பாதிப்புகளை குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
- கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி கல்லீரலின் செயல்பாட்டுத் திறனை அதிகரித்து உடலுக்கு நன்மை பயக்கும்.
- உடலில் இன்சுலின் புரொடக்சன் முறையாக மெயின்டைன் செய்வது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும்.
- உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து சீராக இதய நோய் வராமல் பாதுகாக்கும்.
இப்படி எளிதில் கிடைக்கக்கூடிய பல மருத்துவ நன்மைகளைக் கொண்ட அரச இலையை நாம் அன்றாட உணவாக பயன்படுத்தி பலவிதமான உடல் நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்.

