இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளானஅக்டோபர் 2ம் திகதி சர்வதேச அகிம்சை தினமாக உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அகிம்சை போராட்டங்கள் மூலம் அறவழியில் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்தார்.இவரது அகிம்சை தான் இன்றைய உலகுக்கு அவசிய தேவை.
இதை உணர்த்தும் விதமாக இவரது பிறந்த நாளையொட்டி சர்வதேச அகிம்சை தினமாக ஐ.நா சபை அறிவித்தது.
அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், வன்முறையற்ற வாழ்க்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு இத்தினம் உணர்த்துகிறது

